Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏடிஎம் பணத்தோடு எஸ்கேப் ஆன டிரைவர் கைது!

Advertiesment
ஏடிஎம் பணத்தோடு எஸ்கேப் ஆன டிரைவர் கைது!
, சனி, 21 டிசம்பர் 2019 (18:11 IST)
சென்னையில் ஏடிஎம்-ல் பணம் நிரப்ப வந்தபோது பணத்தோடு வணியை எடுத்துக்கொண்டு தப்பிட டிரைவர் மன்னார்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏ.டி.எம்களில் பணம் நிரப்பும் சி.எம்.எஸ் என்ற தனியார் நிறுவனம் 87 லட்ச ரூபாய் பணத்துடன் 3 நபர்களையும் ஏடிஎம்-ல் பணம் நிரப்ப அனுப்பி வைத்தது. 5 ஏடிஎம்-களில் பணம் நிரப்பிய பிறகு வேளச்சேரி விஜயா பேங்க் ஏடிஎம்-ல் பணம் நிரப்ப சென்றனர். மூன்று அலுவலர்களும் ஏடிஎம்-க்குள் இருந்த நேரம் பார்த்து வண்டியில் இருந்த 52 லட்சத்துடன் தப்பினார் டிரைவர் அம்புரோஸ்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடனடியாக அவரை தேடும் பணியை துரிதப்படுத்தினர். இந்நிலையில் கொருக்கு பேட்டை அருகே அம்புரோஸ் ஓட்டி சென்ற ஏடிஎம் வாகனம் கிடந்தது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் அம்புரோஸ் உறவினர் வீட்டில் 32 லட்ச ரூபாய் மீட்கப்பட்டது. மீதமுள்ள 20 லட்சம் பணத்தோடு தப்பி சென்ற அம்புரோஸை மன்னார்குடியில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகளவில் எந்த நாட்டில் அதிகளவில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது?