Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்தப்பாவை அடைய நினைத்த ஆசிரியை: கடைசியில் நேர்ந்த சோகம்

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (13:54 IST)
தேனியில் சித்தப்பாவை அடைய முடியாததால் இளம் ஆசிரியை விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தை சேர்ந்தவர் ரம்யா. ரம்யா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
 
ரம்யா வயசுக் கோளாறில் அப்பா முறையான தனது சித்தப்பா முத்துக்கிருஷ்ணனை காதலித்து வந்தார். கொடுமை என்னவென்றால் இதுவும் தன் மகள் தான் என கருதாத முத்துக்கிருஷ்ணனும் ரம்யாவை காதலித்து வந்துள்ளார்.
 
இதனையறிந்த ரம்யாவின் பெற்றோர் சமீபத்தில் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். இதனால் ரம்யாவும், முத்துக்கிருஷ்ணனும் விரக்தியில் இருந்தனர்.
 
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மறுவீட்டுக்காக, ரம்யா அவரது கணவரோடு சென்ற போது, தனது சித்தப்பாவை(காதலன்) பார்த்துள்ளார்.
 
இருவரும் பார்த்துக் கொண்ட உடனே பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வந்து அவர்கள் மீண்டும் மன வேதனை அடைந்தனர். இவ்வுலகில் வாழ்வதை விட சாவதே மேல் என இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
 
உயிருக்கு ஆபத்தாக நிலையில் அனுமதிக்கப்பட்ட ரம்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  முத்துக்கிருஷ்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி.மு.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

அரசு பள்ளி மாணவர்கள் எங்கள் பிள்ளை.. தாரை வார்க்க மாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்? சென்னை ஐகோர்ட்

இன்னும் எத்தனை பெண்களை காவு வாங்குவீர்கள்: கைதான சௌமியா அன்புமணி ஆவேச பேட்டி..!

முகுந்தன் தான் பாமக இளைஞரணி தலைவர்! ராமதாஸ் திட்டவட்டம்! - அன்புமணி ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments