Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி மகள் சௌந்தர்யா இரண்டாவது திருமணத்துக்கு தயார்

ரஜினி மகள் சௌந்தர்யா இரண்டாவது திருமணத்துக்கு தயார்
, செவ்வாய், 13 நவம்பர் 2018 (11:14 IST)
நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணத்திற்காக நிச்சயம் முடிந்தது. 
நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவுக்கும் பிரபல தொழிலதிபரின் மகனுக்கும் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ரஜினியின் இரண்டாவது மகளும், இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், தொழிலதிபர் அஸ்வினை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு வேத் கிருஷ்ணா என்ற ஒரு மகன் உள்ளார். பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்டனர்.அதனால் தன் மகனுடன் சௌந்தர்யா அம்மா வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது இவருக்கும் பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் நடிகருமான விசாகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. 
 
முன்னாள் திமுக எம்எல்ஏ பொன்முடியின் சகோதரர் தான் தொழிலதிபர் வணங்காமுடி. அவரது மகன் விசாகன் சமீபத்தில் வெளியான வஞ்சகர் உலகம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அமெரிக்காவில் எம்பிஏ படிப்பை முடித்து, விசாகன் தயாரிப்பு நிறுவனத்தை நடத்துகிறார் விசாகன். 
 
இருவீட்டார் சம்மதத்துடன் வரும் ஜனவரி மாதத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி தெரிவித்த கருத்து தான் என் கருத்தும்: முதலமைச்சர் பேட்டி