Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2வது திருமணம் செய்யவிருக்கும் ரஜினியின் மகள். மாப்பிள்ளை இந்த நடிகரா?

Advertiesment
2வது திருமணம் செய்யவிருக்கும் ரஜினியின் மகள். மாப்பிள்ளை இந்த நடிகரா?
, செவ்வாய், 13 நவம்பர் 2018 (07:30 IST)
சூப்பர்ஸ்டார்  ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கினார்.
இவர் தொழிலதிபர் அஷ்வின் என்பவரை திருமணம் செய்தார்.  இவர்களுக்கு தேவ் என்ற மகன் உள்ளார். இதனிடையே  சௌந்தர்யா- அஷ்வின் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் கடந்த வருடம் விவாகரத்து செய்தனர்.
 
இந்நிலையில் சௌந்தர்யா, தொழிலதிபர் வணங்காமுடி என்பவருடைய மகன் 'விசாகன்' என்பவருடன் காதலில் இருந்ததாகவும். இந்த காதல் குறித்து அறிந்த ரஜினிகாந்த் தற்போது இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியது.
webdunia
 
இதை தொடர்ந்து தற்போது சௌந்தர்யா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ள மாப்பிள்ளையின் பெயர் 'விசாகன்' என்றும் அவரை பற்றிய சில தகவல் வெளியாகியுள்ளது.  இவர் வஞ்சகர் உலகம் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த நடித்தவர் ஆவார். 'விசாகன்' வெளிநாட்டில் எம்.பி.ஏ படிப்பை முடித்து விட்டு தற்போது தந்தை தொழிலை கவனித்து வருகிறாராம். மேலும் இவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த படத்திலும் ஜெயலலிதா பெயரா? –வரலட்சுமியை விடாமல் துரத்தும் நெட்டிசன்கள் !