நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, மகள் திவ்யாவுடன் 'சர்கார்' படத்தை ரசிகர்களுடன்  கண்டுகளித்துள்ளனர். 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
									
										
								
																	
	விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3- வது முறையாக உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அரசியல் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் ராதாரவி வில்லன் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
 
									
										
			        							
								
																	
	 
	இந்நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் ‘சர்கார்’ படத்தைக் கண்டுகளித்தார். அவருடன் இயக்குநர் அட்லி மற்றும் அவரது குடும்பத்தினரும் படத்தைக் காண வந்திருந்தனர். அவர்களுடன் வரலட்சுமி சரத்குமாரும் படத்தை ரசிகர்களுடன் கண்டுகளித்திருக்கிறார். 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	இச்செய்தியை வெற்றி திரையரங்கின் நிர்வாகம் உறுதி செய்துள்ளது .