Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!

MK Stalin

Siva

, புதன், 24 ஜூலை 2024 (13:48 IST)
இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 9 மீனவர்கள், அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
 
ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று முன் தினம் மீன்பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 22 வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச எண்ணிக்கை இது என முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை சிறையில் உள்ள 87 மீனவர்கள், 175 படகுகளை விரைவாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னதாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் ஆரோக்கிய சகாய ராபர்ட்(49),யாகோப்(29), முத்துராமலிங்கம்(65) ராதா(44), சேகர்(40), ஹரி கிருஷ்ணன்(50), பொன் ராமராஜ் (26), ராம்குமார் (24), லிபின் சாய் (25) ஆகிய 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் அவர்களுடைய இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெட்டா ஏஐ.. புதிய அம்சத்தை அறிமுகம் செய்த மார்க் ஸூகர்பெர்க்..!