Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய அணிக்கு எதிரான தொடர்.! இலங்கை அணியின் கேப்டனாக சரித் அசலங்கா தேர்வு.!

Advertiesment
Asalanga

Senthil Velan

, செவ்வாய், 23 ஜூலை 2024 (16:22 IST)
இந்திய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியின் புதிய கேப்டனாக சரித் அசலங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த டி20 உலகக் கோப்பையில் ஹசரங்காவின் தலைமையான இலங்கை அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்தது. குரூப் டி பிரிவில் இடம் பெற்றிருந்த நெதர்லாந்திற்கு எதிரான ஒரே போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றதால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரிலிருந்து வெளியேறியது.
 
தொடர் தோல்வியின் எதிரொலியாக இலங்கை டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வனிந்து ஹசரங்கா ராஜினாமா செய்தார். இந்நிலையில் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் போட்டி ஜூலை 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்தடுத்த ஆட்டங்கள் ஜூலை 28 மற்றும் ஜூலை 30ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தொடர்ருக்கான இலங்கையின் புதிய கேப்டனாக சரித் அசலங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 
இலங்கை அணி வீரர்கள்:

சரித் அசலங்கா (c), பாதும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, சமிந்து தீக்ஷனா, மத்ரவான் விக்ரமசிங் துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவாஸ்கர், கபில்தேவுக்குக் கூட நடந்திருக்கிறது... ருத்துராஜ், நடராஜன் குறித்து பேசிய பாலாஜி!