ஏஐ தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக உலகில் உள்ள அனைத்து துறைகளிலும் பரவி வரும் நிலையில் மெட்டா ஏஐயில் புதிய அம்சத்தை மார்க் ஸூகர்பெர்க் துவக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெட்டா ஏஐயில் வெளியாகியுள்ள புதிய அம்சத்தை சற்று முன் மார்க் ஸூகர்பெர்க் பகிர்ந்துள்ளார். மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஏஇஐ வசதியில் பயனர்கள் தங்களது புகைப்படத்தை நிகழ் நேரத்தில் பல வகையில் தங்களின் கற்பனைக்கு ஏற்ப வகையில் மாற்றிக்கொள்ள முடியும். அதற்கு மெட்டா ஏஐ உதவுகிறது.
இப்போதைக்கு இந்த புதிய அம்சம், அர்ஜென்டினா, சிலி, கொலம்பியா, ஈகுவடார், மெக்ஸிகா பெரு மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் படிப்படியாக இந்தியா உட்பட உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் இந்த மெட்டா ஏஐ என்ற புதிய அம்சம் விரிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது .
மெட்டா ஏஐ மூலம் பயனாளிகள் தங்கள் புகைப்படத்தை விதவிதமான அம்சங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்பதால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்