ஒகேனக்கல் : ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த் ஆவேசம்!
, வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (18:12 IST)
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகள் தாக்கப்பட்டதை எதிர்த்தும் தமிழ்த் திரையுலகினர் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். உதைக்காமல் என்ன செய்வது : ரஜினி ஆவேசம்!
”ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை பிரச்சனையாக்குபவர்களை உதைக்காமல் என்ன செய்வது'' என்று நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக கேட்டார். எனக்கு வருத்தம் என்னன்னா, ஒரு தேசிய கட்சி அதுவும் அந்த மாநிலத்தின் மிகப்பெரிய தலைவர் அவரு வந்து தூண்டி விடுகிறார்.தமிழர்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் : சத்யராஜ் ஆவேசம்!
காவிரி, முல்லைப் பெரியாறு, தமிழீழம் என எல்லா விடயங்களிலும் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன; தமிழர்கள் இதற்கு இடம் கொடுக்காமல் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் கூறினார். மத்திய அரசை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் : விஜயகாந்த்!
அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில் இடதுசாரிகள் எப்படி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து செயல்படுகிறார்களோ அதுபோல தமிழக அரசும் ஒகேனக்கல் பிரச்சனையில் நடந்துகொள்ள வேண்டும் என்று என்று தே.மு.தி.க தலைவர் கூறினார்.