பங்குச் சந்தைகளில் உயர்வு!
, செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (13:37 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன.அதற்கு பிறகு ஏற்ற இறக்கமாக இருந்த பங்குச் சந்தை, ரிசர்வ் வங்கி பொருளாதார கொள்கை அறிவித்த பிறகு, இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்தன. ரிசர்வ் வங்கி பொருளாதாக கொள்கையில் பெரிய அளவு மாற்றம் செய்யவில்லை. வட்டி விகிதங்களை உயர்த்துதல், கடனுக்கான விதி முறைகளில் மாற்றம் செய்யவில்லை. வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதங்களை மட்டும் கால் விழுக்காடு அதிகரித்தது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு பங்குச் சந்தைகளில் எவ்வித பாதகமான விளைவுகளையும ஏற்படுத்தவில்லை. இதனால் காலையில் இருந்த நிலை பங்குச் சந்தைகளில் மாறியது. நண்பகல் 1 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 402.41 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,418.37 ஆக இருந்தது. அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 94.65 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,194.30 ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் மிட்கேப் 79.69, சுமால் கேப் 86.41, பி.எஸ்.இ 500- 132.18 புள்ளி அதிகரித்தது. தேசிய பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன. காலை நிலவரம்!