Newsworld Finance Market 0804 29 1080429013_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

Advertiesment
மும்பை
, செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (11:02 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 61 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 17,076.44 ஆக உயர்ந்து இருந்தது.

இதே போல் நிஃப்டி 9 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5,5098.40 ஆக உயர்ந்து இருந்தது.

ஆனால் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இரண்டு பங்குச் சந்தைகளிலும், எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் ஏற்ற இறக்கத்துடன் உள்ளன.

இன்று ரிசர்வ் வங்கி பொருளாதார கொள்கையை அறிவிக்க உள்ளது. இதை தொடர்ந்தே பங்குச் சந்தைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் கூட்டமும் இரண்டு நாட்களில் நடக்க உள்ளது. இது ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் இரண்டு விழுக்காடு வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. மேலும் வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிடலாம் என்று தெரிகிறது. இவையும் இந்திய பங்குச் சந்தையில் எதிரொலிக்கும் வாய்ப்பு உள்ளது.

காலை 10.35 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 41.28 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 17,052.24 ஆக இருந்தது.

தேசிபங்குசசந்தையினநிஃப்டி 10.85 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5100.50 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 20.25 பி.எஸ்.இ. 500- 16.93, சுமால் கேப் 40.41 புள்ளிகள் அதிகரித்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் சென்செக்ஸ், நிஃப்டி உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப பிரிவு குறைந்து இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் 1082 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 984 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 48 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,509.42 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,547.75 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.38.33 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.918.44கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,085.05 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.166.61 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 20.11, எஸ்.பி 500- 1.47 புள்ளிகள் குறைந்து இருந்தன. அதே நேரத்தில் நாஸ்டாக் 1.47 புள்ளி அதிகரித்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று நடந்த வர்த்தகத்தில் குறியீட்டு எண்கள் உயர்ந்தன.

ஆசிநாட்டபங்குசசந்தைகளில், சில பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் உயர்ந்தும், சிலவற்றில் சரிந்தும் இருந்தன.

தெனகொரியாவினசியோலகாம்போசிட் 16.96, சிங்கப்பூரினஸ்டெய்ர்டடைம்ஸ் 23.53 புள்ளிகள் குறைந்து இருந்தன.

ஜப்பானின் நிக்கி 30.90, சீனாவின் சாங்காய் காம்போசிட் 98.96 ஹாங்காங்கினஹாங்செங் 284.37 புள்ளிகள் அதிகரித்தன.

நேற்று இந்திய பங்குச் சந்தைகளில் காலையில் இருந்தே ஏற்ற இறக்கமாக இருந்தது. மாலையில் சென்செக்ஸ், நிஃப்டி குறைந்தன.

இன்று காலையில் இருந்தே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. ரிசர்வ் வங்கி காலாண்டிற்கான பொருளாதார கொள்கையை அறிவிக்க உள்ளது. இதனை பொறுத்தே பங்குச் சந்தையின் நிலவரம் இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil