Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த செய்யும் மூலிகைகள் என்ன...?

சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த செய்யும் மூலிகைகள் என்ன...?
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை பயன்படுத்துகிறோம். ஆராய்ச்சியில் வெந்தயம் கணையத்தைப் பலப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. வெந்தயம் போன்று, நெல்லிக்காய், ஆவாரம் பூ, வல்லாரைக் கீரையும் கணையத்தைப் பலப்படுத்தக் கூடியவை.

பட்டை: கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவில் பட்டையைச்சேர்த்துவதால் உணவுக்குப்பின் ரத்தத்தில் க்ளுகோஸ் அளவு அதிகமாகாமல் பார்த்துக்  கொள்கிறது. காரமான சுவை உடையது. ஆகவே கபத்தைச் சமப்படுத்துகிறது. இன்சுலினைப்பலவிதங்களில் பயன்படுத்த தக்க விதத்தில் செயல்படுத்துகிறது. உடலின்  திறனை மேம்படுத்துகிறது.
 
ஆவாரம் பூ: 150 மி.லி. நீரில், 11 கிராம் அன்று பூத்த ஆவாரம் பூவைப் போட்டு மூடிவைத்து நீர் 100 மி.லி. ஆக சுண்டும் வரை கொதிக்கவைக்க வேண்டும்.
 
ஆவாரம்பூ மலச்சிக்கலைத் தீர்க்கும். சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்தும் ஆவாரம் பூவைத் தேநீரில் போட்டுக் குடித்துவந்தால், சருமம் பளிச்சிடும்.
 
பாகற்காய் : இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. செல்கள், க்ளுகோஸ் உறிஞ்சுவதை அதிகப்படுத்துகிறது. குடலிலிருந்து சேமிப்பாக இருக்கும் க்ளுகோஸ்  உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.
 
நெல்லிக்காய்: ஐந்து நெல்லிக்காய்களை விதை நீக்கி, 50 மி.லி கிடைக்கும் வகையில் சிறிது நீர் விட்டு, சாறு பருகவேண்டும். இது கனையத்தைச் சரிசெய்து இன்சுலின் சுரப்பைச் சீராக்கும். இந்தக் கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் பருகிவர இன்சுலின் சுரப்பு சீராகும்.
 
நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்புச் சத்து, ஆண்டி ஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். பார்வைக் குறைபாடு, கை, கால் நடுக்கம், சீக்கம், சிறுநீரகப் பிரச்சனையைச் சரிசெய்யும்.
 
வல்லாரை: வல்லாரையை சமைக்காமல் பச்சையாகத் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பலி: சீனாவை தாண்டிய இத்தாலி!