Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இத்தனை மருத்தவ பயன்களை கொண்டதா சுண்டைக்காய்...!

இத்தனை மருத்தவ பயன்களை கொண்டதா சுண்டைக்காய்...!
சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.
சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கல் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
 
வாயுப் பிடிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம்  எலும்புகள் பலப்படும்.
 
ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது  நல்லெண்ணெயில்  வறுத்து சாப்பிட்டால். நோய் கட்டுப்படும். சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க  உதவுகின்றது. அதேபோன்று சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு  நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்
 
மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும்
 
சுண்டைக்காயை உனவில் சேர்த்து வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். மேலும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின்  உட்புறச் சுவர்கள் பலமடையும் புளித்த ஏப்பம், மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. எனவே உணவில் அடிக்கடி  சேர்த்துக்கொள்ளவேண்டும்
 
குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க சுண்டைக்காய் உதவும். இவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில்  உள்ள பூச்சிகள் அழிந்துவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹேர் கலரிங் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை....!!