Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவகுணம் கொண்ட மலர்களின் பயன்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்...!!

மருத்துவகுணம் கொண்ட மலர்களின் பயன்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்...!!
மருத்துவத்தில் பூக்களும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எந்த மலர் எந்த விதத்தில் பயன்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
மருதாணிப் பூவை தூங்கச் செல்லுமுன் தலையில் வைத்துக்கொண்டால் அல்லது படுக்கையில் வைத்துக் கொண்டால் ஆழ்ந்த தூக்கம் வரும். மனரீதியாக பிரச்சனை உள்ளவர்கள் இந்தப் பூவை வைத்துக்கொண்டால் பிரச்சனை அகன்றுவிடும்.
 
அரளிப்பூ தலையில் உள்ள பேன்களை கொல்லும். அல்லி மலரின் இதழ்களையும், அதன் உள்பகுதியையும் அப்படியே பச்சையாக சாப்பிடலாம். இதனால் உஷ்ணம் குறையும். நீரிழிவு உள்ளவர்கள் அல்லிப்பூ கொதிக்க வைத்த நீரைக் குடித்தால் நோய் கட்டுப்படும்.
 
மல்லிகைப் பூக்கள் களைப்பை நீக்கி புத்துணர்ச்சி தரும். கண் வியாதிகளை நீக்கும். மல்லிகை மணம் தாம்பத்திய உறவை நீடிக்கச் செய்யும்.
 
ரோஜா மலரின் இதழ்கள் வாய்ப்புண், குடல் புண், தொண்டை புண்ணை ஆற்றும். சீறுநீர் கடுப்பை நீக்கும். காது வலி, காதுப்புண்ணை ரோஜா  தைலம் குணமாக்கும். மூலச்சூடு, மலச்சிக்கல், ரத்த சுத்திகரிப்பு போன்றவைக்கும் ரோஜா நல்ல மருந்து.
 
இலுப்பை மலர்கள் ஆண்மைக் குறைவுக்கு அரிய மருந்து. சளி, மூக்கடைப்புக்கு தூதுவளை மலர் நல்லது.
 
தாமரை மலரை சுத்தம் செய்து குடிநீரில் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் ரத்த மூலம், சீதபேதி குணமடையும். மூளை வளர்ச்சிக்கு தாமரை  மலர் முக்கிய மருந்தாகும்.
 
தாமரை விதையை சாப்பிட்டால் ரத்த விருத்தி உண்டாகும். உடல் சூடு குறையும்.முருங்கைப்பூ தாது வளர்ச்சிக்கு உகந்தது. வேப்பம்பூ குடலை  சுத்தம் செய்து பூச்சிகளை கொல்லும். மகிழம்பூ காது வலியை சரி செய்யும். எருக்கம் பூ குஷ்டநோயை குணப்படுத்தும் என்று சித்த  வைத்தியமுறை கூறுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயற்கை முறையில் முகத்தை பளபளப்பாக்க எளிய குறிப்புகள்...!