Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரசத்தில் சேர்க்கப்படும் பொருட்களில் உள்ள மருத்துவ நன்மைகள்...!!

ரசத்தில் சேர்க்கப்படும் பொருட்களில் உள்ள மருத்துவ நன்மைகள்...!!
நமது அன்றாட உணவுவில் சேர்க்கும் பொருட்களான வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறிவேப்பிலை, கொத்துமல்லி, கடுகு, இஞ்சி முதலியன சேர்க்கவேண்டியது நல்லது என்றாலும், இவை அனைத்தும் சேர்வது ரசத்தில் மட்டும்தான்.
புளி ரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பல வகைகளிலும், சுவைகளிலும் ரசத்தைத்  தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.
 
நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்துதான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது. வெளிநாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது  சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.

webdunia

 
சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் உள்ளது. ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக்  குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.
 
ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. ஆண்மை அதிகரிக்கிறது.  அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.
 
கொத்துமல்லி ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது. மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது.
 
வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.
 
ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள்  முதலியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவையான இனிப்பு மற்றும் கார குழி பணியாரம் செய்ய....!