Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குறைந்த விலையுள்ள சேலைக்காக அடித்துக்கொண்ட பெண்கள்

Advertiesment
saree
, திங்கள், 24 ஏப்ரல் 2023 (19:30 IST)
ஜவுளி கடையில் ஒரு சேலைக்காக இரண்டு பெண்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில்  முதல்வர்  பசுவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில தலை நகர் பெங்களூரில்  உள்ள மல்லேஷ்வரம் பகுதியில் மைசூல் சில்ஸ் என்ற ஜவுளிக் கடை இயங்கி வருகிறது.

இந்த  நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டி, குறைந்த விலையில் புடவைகள் விற்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தக் குறைந்த விலையில் புடவைகளை எடுக்க மக்களுக்கும் குவிவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை வரிசையில், போலீஸாரும், ஊழியர்களும் அனுப்பிக் கொண்டிருப்பர்.  

அந்த நேரம்பார்த்து, கடையில் நின்றிருந்த இருபெண்களுக்கு இடையே குறைந்த விலையுள்ள ஒரு புடவையை எடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஒருவரை ஒருவர் பிடித்து இழுத்து தாக்கிக் கொண்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!