Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

Advertiesment
semen

Mahendran

, செவ்வாய், 24 டிசம்பர் 2024 (17:38 IST)
மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் திருமணமான 4 மாதங்களில்  கணவரை இழந்தார். அதன் பின்னர், அவர் கணவரின் விந்தணுவை சேமிக்க வேண்டும் என்று மருத்துவரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் அந்த கோரிக்கையை நிராகரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணமான நான்கே மாதத்தில் கணவரை விபத்தில் பறிகொடுத்த இளம்பெண்ணிடம், கணவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு அந்த பெண், "தன்னுடைய கணவரின் விந்தணுவை சேமிக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே அனுமதி தருவேன்" என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்த போது, ஒருவர் இறந்த 24 மணி நேரத்துக்குள் மட்டுமே விந்தணுவை சேமிக்க முடியும் என்றும், தற்போது அவருடைய விந்தணுவை சேமிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும், அந்த மருத்துவமனையில் விந்தணுவை சேமிக்க கூடிய வசதியும் இல்லையென கூறினர். இதைக் கேட்ட அந்த பெண் கதறி அழுதார். காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் அவரை சமாதானப்படுத்தி, பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க வைத்தனர்.

இந்த நிகழ்வு குறித்து மருத்துவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "திருமணமான நான்கே மாதத்தில் கணவரை இழந்ததால் அந்த பெண் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். அவரது கோரிக்கையை குறை சொல்ல முடியாது. ஆனால் கோரிக்கை கால தாமதமாக இருந்ததால் அதை நிறைவேற்ற முடியவில்லை" என்று தெரிவித்தார்.



Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது