மதுபோதையில் இருசக்கர வாகன ஓட்டிய இளைஞர் விபத்தில் சிக்கி, தலை துண்டித்து பரிதாபமாக பலியான சம்பவம் சென்னை அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று அதிகாலை கேரளாவை சேர்ந்த விஷ்ணு என்ற 24 வயது இளைஞர், இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், குடிபோதையில் இருவரும் அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில், சாலை தடுப்பில் மோதி 20 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். இதில் கோகுல் தலை துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஐடி பொறியாளரான விஷ்ணு மற்றும் அவருடைய நண்பர் கோகுல் (24 வயது), நண்பர் வீட்டில் நடந்த பார்ட்டியில் பங்கேற்று விட்டு, அதிகாலை 4 மணிக்கு மீண்டும் மதுபாட்டில் வாங்கிக் கொண்டு திரும்பும் போது தான் இந்த விபத்து நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதே போல், மதுபோதையில் ஈரோடு மாவட்டம் செங்கோடன்பாளையம் என்ற பகுதியில் அதிவேகமாக வந்த கார் வீட்டுக்குள் புகுந்ததில், காரை ஓட்டிய இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை அந்த பகுதியில் உள்ளவர்கள் கண்ணாடியை உடைத்து மீட்டுள்ளனர்.