பிரேசில் நாட்டில் கிறுஸ்துமஸை கொண்டாட பல பயணிகள் வந்திருந்த நிலையில் விமானம் ஒன்று பயணிகள் வீதியில் விழுந்து நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள க்ரமாடோ (Gramado) நகரம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து தங்கி போகும் மலைவாசஸ்தலமாக உள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் சீசன் என்பதால் பல நாடுகளில் இருந்தும் அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் பறந்த சிறிய ரக விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மக்கள் நடமாடும் கடை வீதியின் பக்கம் சென்று விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 10 பேருமே உடல் கருகி பலியான நிலையில், விமானம் விழுந்ததில் படுகாயமடைந்த அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K