ஜம்மு காஷ்மீரில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடாத பாஜக.. தோல்வி பயமா?
, வியாழன், 12 செப்டம்பர் 2024 (16:15 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடாமல் ஒரு சில குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கு ஜம்மு காஷ்மீர் பாஜக கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடாமல் 38 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளன.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் 19 தொகுதிகளிலும், தெற்கு காஷ்மீரில் எட்டு தொகுதிகளிலும், மத்திய காஷ்மீரில் ஆறு தொகுதிகளிலும், வடக்கு காஷ்மீரில் 5 தொகுதிகளிலும் மட்டும் போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது.
அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடாததற்கு காரணம் எதுவும் தெரிவிக்காத நிலையில் ஜம்மு காஷ்மீர் பாஜக இந்த முடிவுக்கு அதிருப்தியை தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சில பாஜக ஆதரவாளர்கள் இந்த முடிவு தந்திரமான திட்டம் என்று கூறி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்