Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேலூர் சிறைத்துறை டிஐஜி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.! கைதி சித்ரவதை விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை.!!

Dig Rajalakshmi

Senthil Velan

, வியாழன், 12 செப்டம்பர் 2024 (16:06 IST)
கைதி சித்ரவதை செய்யப்பட்டதாக விவகாரத்தில் வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை, டிஐஜி உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாகவும், அப்போது வீட்டில் இருந்த நகைகளை அவர் திருடியதாக கூறி கொடுமைப்படுத்தியதாகவும் சிவக்குமாரின் தாய் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். 
 
மனு மீதான விசாரணையின்போது, சிறையில் இருந்த கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு காவல்துறையினர் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால், வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது. 
 
மேலும், நீதிமன்ற உத்தரவின் படி, சிவக்குமார், வேலூர் சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து சிபிசிஐடி எஸ்பி வினோத் சாந்தாராம் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவினர் நேற்று வேலூர் மத்திய சிறைக்கு வந்தனர். அங்கு கைதி சிவக்குமார் அடைக்கப்பட்டிருந்த அறைகளை ஆய்வு செய்தனர். 
 
பின்னர் டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உட்பட 14 பேரிடம் தனித்தனியாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.  14 பேரிடம் நடத்திய விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகம், புதுவையில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!