Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய சக்தியுடன் மீண்டும் வருவேன்... ஷாட் பிரேக் விட்ட உத்தவ் தாக்கரே!!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (11:44 IST)
புதிய சக்தியுடன், மறைந்த தலைவர் பால் தாக்கரேவின் ஆசியுடன் கட்சியை மீண்டும் பலப்படுத்துவேன் என உத்தவ் தாக்கரே பேச்சு. 

 
மகாராஷ்டிர மாநிலத்தை ஆட்சி செய்து வந்த சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் சிலர் திடீரென போர்க்கொடி தூக்கியதை அடுத்து ஆட்சிக்கு ஆதரவளித்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனை அடுத்து தனது பெரும்பான்மையை முதல்வர் உத்தவ் தாக்கரே நிரூபிக்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில கவர்னர் உத்தரவிட்டார். 
 
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்ற சிவசேனா கட்சிக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில் திடீரென முதல்வர் பதவியிலிருந்து உத்தவ்தேவ் தாக்கரே ராஜினாமா செய்துள்ளார். அவருடைய இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
இதனைத்தொடர்ந்து அவர் கூறியதாவது, தற்போது என்னுடன் 4 மந்திரிகள் மட்டுமே உள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை நான் முழு மனதுடன் பின்பற்றுவேன். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மும்பைக்கு அழைத்துவர நான் முயற்சி செய்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தைரியமாக சட்டசபைக்கு வரலாம், வாக்குகளை பதிவு செய்யலாம். இருப்பினும் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் எனக்கு எதிராக வாக்கு அளித்தாலும் அது எனக்கு அவமானமாகும். எனக்கு பதவியில் ஆசையில்லை.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் கலந்துகொள்ள நான் விரும்பவில்லை. எனவே நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். புதிய சக்தியுடன், மறைந்த தலைவர் பால் தாக்கரேவின் ஆசியுடன் கட்சியை மீண்டும் பலப்படுத்துவேன். சிவசேனாவை யாரும் எடுத்து சென்றுவிட முடியாது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments