உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி சுரங்கத்தில் 17 நாட்களாக சிக்கியிருந்த தொழிலாளியை மாலை அணிவித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வரவேற்றார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தமி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது.
இந்தச் சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் உள்ளே 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர்.
அதாவது, 4.5 கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மா நில பேரிடர் மீட்புப் படைகள் தீயணைப்புத்துறையினர் பணியாளர்களை மீட்கத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியான நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடந்தது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கு தேவையான தண்ணீர், ஆக்சிஜன், உணவு ஆகியவை குழாய்கள் மூலம் செலுத்தப்பட்டு வந்தது.
எனவே அனைத்து தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை இன்றிரவுக்குள் மீட்கப்படுவார்கள் என தகவல் வெளியானது.
இதையடுத்து, தொழிலாளர்களை மீட்கும் முயற்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தேசிய பேரியர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் சொன்னபடியே தேசிய மீட்பு படை உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
பலகட்ட போராட்டங்களை கடந்து தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட மீட்புக் குழுவினருக்கு பலத்த பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மேலும், உத்தரகாசி சுரங்கத்தில் 17 நாட்காளாக சிக்கியிருந்த தொழிலாளியை மாலை அணிவித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியடைந்துள்ளது.