Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவித்த முதல்வர்: தேர்தல் ஆணையம் கண்டனம்

சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவித்த முதல்வர்: தேர்தல் ஆணையம் கண்டனம்
, சனி, 8 செப்டம்பர் 2018 (06:36 IST)
முன்கூட்டியே தேர்தல் நடத்தும் வகையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சமீபத்தில் தனது அமைச்சரவையை ராஜினாமா செய்து சட்டசபையை கலைக்குமாறும் பரிந்துரை செய்தார். இதனையடுத்து சட்டசபையை கலைத்த ஆளுனர் காபந்து அரசாக நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார்

இந்த நிலையில் டிசம்பரில் நடைபெறும் 4 மாநில தேர்தலுடன் தெலுங்கானா மாநில தேர்தலையும் நடத்துவது குறித்து இன்னும் தேர்தல் ஆணையம் முடிவு செய்யவில்லை. மாநில தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை செய்த பின்னரே தெலுங்கானா மாநில தேர்தல் குறித்து முடிவு செய்யப்படும் என நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் கூறினார்.

webdunia
இந்த நிலையில்  தெலுங்கானா சட்டசபையை கலைப்பது தொடர்பான பரிந்துரையை சமர்பித்த பின்னர் முதல்வர் சந்திரசேகர் ராவ், தெலுங்கானாவில் நவம்பர் மாதம் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார். இதற்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்களுடன் மாநில அதிகாரிகளுடன் தேர்தல் அதிகாரி தேர்தல் தேதி குறித்து பேசியதாக வெளியாகிய தகவலையும் தேர்தல் ஆணையர் ஒபி ராவத் மறுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.பி, எம்.எல்.ஏ மகள்கள் உள்பட 400 பெண்களை ஏமாற்றிய மோசடி நபர் கைது