தெலுங்கானா மாநில முதல்வர் நேற்று தனது அமைச்சரவையை கலைக்குமாறு ஆளுனரிடம் கேட்டு கொண்ட நிலையில் ஆளுனரும் அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்று காபந்து அரசாக நீடிக்க கேட்டுக்கொண்டார்.
வரும் டிசம்பரில் மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதனுடன் சேர்த்து தெலுங்கானா தேர்தலும் நடத்தவே முதல்வர் சந்திரசேகரராவ் திட்டமிட்டிருந்தார். ஆனால் சற்றுமுன் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அளித்த பேட்டியில், '5 மாநிலங்களில் நவம்பரில் தேர்தல் நடத்தி டிசம்பரில் முடிவு அறிவிப்பது என்பது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து துணை ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையிலான தேர்தல் ஆணைய குழு செப்.11ஆம் தேதி ஆய்வு செய்யும் என்றும், இந்த ஆய்வுக்கு பின்னர் தேர்தல் ஆணையத்திடம் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும், அந்த அறிக்கையை பொருத்தே தெலுங்கானாவில் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது முடிவு செய்யப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.
எனவே தேர்தல் நடத்த காலதாமதம் ஆனால் சட்டசபை கலைத்ததே வேஸ்ட் ஆகிவிடும் என்பதால் சந்திரசேகரராவ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.