Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க தயாரா? – உச்சநீதிமன்றம் கொடுத்த ஆப்சன்!

Advertiesment
வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க தயாரா? – உச்சநீதிமன்றம் கொடுத்த ஆப்சன்!
, திங்கள், 11 ஜனவரி 2021 (12:34 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில் அதை வேளாண் சட்டத்தை நிறுத்தி வைப்பது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 45 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான சூழல் ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் மறுபுறம் கொரோனா, பறவைக்காய்ச்சல் போன்றவற்றால் டெல்லி கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து மத்திய அரசுக்கு வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி மத்திய அரசு வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தால், வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய உச்சநீதிமன்றம் தனி குழு அமைப்பதாகவும், அதன்மூலம் விவசாயிகளின் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை பரிசீலிப்பதாக போராட்டத்தை திரும்ப பெற செய்வதாகவும் கூறியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு உரிய பதிலை அளிக்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக எல்லைக்குள் புகுந்து ரெளடித்தனம்: வாட்டாள் நாகராஜூக்கு கண்டனம்!