வரலாற்றில் சர்ச்சைக்குரிய நபரான நாதுராம் கோட்சே பெயரில் மத்திய பிரதேசத்தில் பாடசாலை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் குவாலியர் பகுதியில் இந்து மகா சபை சார்பில் “கோட்சே ஞான சாலை” என்ற பாடசாலை தொடங்கப்பட்டுள்ளது. காந்தியை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டவர் கோட்சே என்பதால் வரலாற்றில் எப்போதும் சர்ச்சைக்குரிய நபராகவே கோட்சே அறியப்படுகிறார்.
இந்நிலையில் அவரது பெயரில் நடத்தப்படும் இந்த பாடசாலையில் இந்திய பிரிவினை குறித்தும், சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்தும் இளைஞர்களுக்கு விளக்கமான தகவல்கள் தரப்படும் என அதன் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.