Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ. 500-க்கு சிலிண்டர்’: ராகுல் காந்தியின் வாக்குறுதி!

Rahul Gandhi
, திங்கள், 5 செப்டம்பர் 2022 (15:56 IST)
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி அதிரடியாக வாக்குறுதி அளித்துள்ளது மக்கள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் பாஜக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மும்முனைப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி 8 வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதிகள் வருமாறு
 
குஜராத் மாநில மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ மற்றும் மருந்துகள் வழங்கப்படும் 
 
3 லட்சம் வரை விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும்
 
ஒரு லிட்டர் பால் ஐந்து ரூபாய் மானியமாக கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும்
 
1000 ரூபாய்க்கு விற்பனை செய்துவரும் சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் 
 
பெண்களின் இலவச கல்விக்காக 3000 ஆங்கில பள்ளிகள் தொடங்கப்படும் 
 
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் 
 
விவசாயிகளின் மின்சார கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்
 
மாதம் 300 யூனிட் மின்சாரம் வழங்கப்படும்
 
 மேற்கண்ட ராகுல் காந்தியின் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷேட்69 ஸ்டுடியோஸ் 3 ஆண்டுகால சாதனை பயணத்தில் பல மணிமகுடங்கள்!