Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இந்தி தெரிந்தவர் தான் வரவேண்டுமா? சசிதரூர் கேள்வி!

Advertiesment
sasitharoor
, வியாழன், 1 செப்டம்பர் 2022 (07:45 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த பதவிக்கு வருபவர்களுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என பெரும்பாலான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு செப்டம்பர் 16ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் செப்டம்பர் 19-ஆம் தேதி எண்ணப்பட்டு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார். 
 
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அவர் கூறியபோது தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் ஜனநாயக நாட்டில் கட்சியின் தலைவரை தேர்தல் நடத்தி தேர்வு செய்வது நல்ல செயல் திட்டம் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்தி தெரிந்தவர்தான் தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்றால் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி அதில் வெற்றி பெற்று தாராளமாக தலைவராக வரட்டும் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு: அதிர்ச்சி தகவல்