Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

3 மாதங்கள் கட்டணம் தள்ளுபடி: பிரபல பள்ளி முதல்வர் அறிவிப்பு

Advertiesment
பள்ளி
, ஞாயிறு, 14 ஜூன் 2020 (07:58 IST)
3 மாதங்கள் கட்டணம் தள்ளுபடி: பிரபல பள்ளி முதல்வர் அறிவிப்பு
இந்த கொரோனா வைரஸ் காலகட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. மேலும் பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமுள்ள பல பள்ளிகளில் தற்போது ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்துவதே பெற்றோர்களிடமிருந்து பள்ளி கட்டணத்தை பெறுவதற்காகத்தான் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது 
 
அது உண்மை என்பதை போல பல பள்ளிகளில், கட்டணங்களை கட்டச் சொல்லி வலியுறுத்துவதாக வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரில் உள்ள தனியார் பள்ளி தங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 3 மாத கட்டணங்களை தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்து பள்ளியின் முதல்வர் மம்தா மிஸ்ரா என்பவர் கூறும்போது ’எங்கள் பள்ளியில் அனைத்து விதமான சமூக மக்களும் கல்வி பயின்று வருகின்றனர். எனவே அனைவராலும் பள்ளி கட்டணத்தை கட்ட முடியும் என்பது சாத்தியமல்ல. எனவே ஏப்ரல் மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாத கட்டங்களைத் கட்டணங்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளோம் என்று அறிவித்துள்ளார்
 
தனியார் பள்ளிகள் அராஜகமாக பெற்றோர்களிடமிருந்து கட்டணங்களை வசூலித்து வரும் நிலையில் இந்த பள்ளியில் மட்டும் மூன்று மாத கட்டணங்களை தள்ளுபடி செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் வெற்றி பெறாவிட்டால் நாட்டுக்கு நல்லதல்ல: அதிபர் தேர்தல் குறித்து டிரம்ப்