தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளிகள் திறப்பது தள்ளிப் போயுள்ள நிலையில் எப்போது திறக்கலாம் என்ற அறிக்கை வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பள்ளிகள் திறப்பும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது சம்மந்தமாக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில் 6 கட்டங்களாக பள்ளிகள் திறக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.
முதல் வாரம் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கும், இரண்டாவது வாரம் 9, 10-ம் வகுப்புகளுக்கும், 4ஆவது வாரம் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கும், 7ஆவது வாரம் 3 முதல் 5-ம் வகுப்புகளுக்கும் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், அதன் பின்னர் ஐந்து வாரங்கள் கழித்து நர்சரி பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வகுப்பில் 35 மாணவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படவேண்டும் என்றும் மாணவர்கள் ஒருநாளில் அமர்ந்த இருக்கையிலேயே தினமும் அமர வைக்கப்படவேஎண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.