Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் குவிப்பு! – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Advertiesment
தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் குவிப்பு! – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
, சனி, 9 நவம்பர் 2019 (08:22 IST)
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருப்பதால் தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருப்பதால் நாடு முழுவதும் பரபரப்பு நிலை நிலவி வருகிறது. இதனால் தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விடுப்பில் சென்ற காவலர்களும் அழைக்கப்பட்டு காவல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகமெங்கும் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியாகும் சமயம் பட்டாசு வெடித்தோ, இனிப்பு வழங்கியோ கொண்டாட கூடாது என்றும், தீர்ப்புக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட காதல் தம்பதிகள் – மீண்டும் ஆணவக்கொலையா ?