Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீவிரவாதிகள் ஊடுருவல்; அயோத்தி தீர்ப்பு தள்ளிவைப்பா?

Advertiesment
தீவிரவாதிகள் ஊடுருவல்; அயோத்தி தீர்ப்பு தள்ளிவைப்பா?
, செவ்வாய், 5 நவம்பர் 2019 (13:08 IST)
அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், 7 தீவிரவாதிகள் உத்தரப் பிரதேசத்திற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பல ஆண்டுகளாகவே அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு என்பதில் பிரச்சனை எழுந்துவருகிறது. இது குறித்தான விசாரணையில் தீவிரமாக உச்சநீதிமன்றம் இறங்கியுள்ளது.
 
இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், டி.ஒய்.சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன் ஆகிய நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
 
இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17 ஆம் தேதி ஓய்வு பெறும் நிலையில், வருகிற 15 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பை ஒட்டி ஏற்கனவே அயோத்தி மற்றும் உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
முன்னதாக பிரதமர் மோடி, அயோத்தி தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் அமைதி காக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில், ஹிந்து அமைப்புகளும், முஸ்லீம் அமைப்புகளும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடப்போம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், 7 தீவிரவாதிகள் உத்தரப் பிரதேசத்திற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல்களை அரங்கேற்றும் சதித் திட்டத்துடன் இந்த தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாதக் குழுக்களை சேர்ந்தவர்கள் என்றும் உளவுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நேபாளத்தின் வழியாக இந்த 7 தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பும் கண்காணிப்பும் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதனால் தீர்ப்பு வெளியாவதில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் பதவி எங்களுக்கே... அடித்து பேசும் சிவசேனா மூத்த தலை!