’அயோத்தி சர்ச்சை நில வழக்கில் ’ நாளை தீர்ப்பு : நாடு முழுவதும் பரபரப்பு !

வெள்ளி, 8 நவம்பர் 2019 (21:22 IST)
பாபர் மசூதி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு 3 தரப்பு உரிமை கோரியது. சன்னு வஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா , ராம் லல்லா அமைப்புகள் அலஹாபாத் நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இம்மூன்று அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இடத்தை சரிசமமாக பிரித்துக் கொள்ளலாமென அளித்த நீதிமன்றத்தி  இந்த தீர்பை எதிர்த்து மூன்று அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்தனர். நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த வழக்கை முடிக்க மூன்று பேர் கொண்ட சமரச குழு அமைக்கப்பட்டும் தீர்வுகள் எட்டப்படவில்லை.
 
இதனையடுத்து , இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு  40 நாட்கள், மற்ற எல்லா வழக்குகளையும் ஒதுக்கிவிட்டு தொடர்ந்து இதுகுறித்த விசாரணைக்குப் மேற்கொண்டு , சமீபத்தில்  தீர்ப்பை  ஒத்தி வைத்தது.
 
இதையடுத்து, அயோத்தி பாபர் மசூதி வழக்கில் அன்று ஒட்டு மொத்த விசாரணையும் முடிக்கப்படுவதாக நீதிபதி சஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். 
 
மேலும் மூன்று தரப்பினரின் வாதங்களை அன்று முடிவடைந்ததை அடுத்து, அயோத்தி வழக்கின் தீர்ப்பு தேதியை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒத்திவைத்துள்ளார். அதாவது தலைமைநீதிபதி ஓய்வு பெறும்  நாளான நவம்பர் 17 க்குள் அவர் இந்த தீர்ப்பை வெளியிடுவார் என பலரும் எதிர்ப்பார்த்து வந்தனர்.
 
இந்நிலையில், அயோத்தி வழக்கில் நாளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. இதற்கான அறிவிப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. 
 
அதில், நாளை காலை 10: 30 மணிக்கு சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பலத்த பாதுக்காப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஒரே அடி... குழந்தையை கடிக்க வந்த நாய் ! அடித்து விரட்டிய ’சூப்பர் பூனை’ ! வைரல் வீடியோ