Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள்; தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் விருது?

Advertiesment
Padma awards
, வியாழன், 26 ஜனவரி 2023 (12:08 IST)
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் தேர்வாகியுள்ளனர்.

ஆண்டுதோறும் இந்தியாவில் கலை, சமூக சேவை, மருத்துவம், விளையாட்டு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை சிறப்பிக்கும் விதமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள பத்ம விருதுகளில் தமிழர்கள் சிலரும் தேர்வாகியுள்ளனர். 2023ம் ஆண்டிற்கான பத்ம விபூஷன் விருதுகள் ஓவியர் ஷாகிர் உசைன், எஸ் எம் கிருஷ்ணா, மறைந்த முலாயம் சிங் யாதவ் ஆகிய 6 பேருக்கு வழங்கப்படுகிறது.

பத்ம பூஷண் விருதுகள் எழுத்தாளர் எஸ் எல் பைரப்பா, தொழிலதிபர் குமார் மங்களம் பிர்லா, பாடகி வாணி ஜெயராம், இன்போசிஸ் சுதா மூர்த்தி உள்ளிட்ட 9 பேருக்கு வழங்கப்படுகிறது.


பத்மஸ்ரீ விருதுகள் மொத்தம் 91 பேருக்கு வழங்கப்படுகிறது. அதில் இருளர் சமூகத்தை சேர்ந்த பாம்புபிடிக்கும் இளைஞர்களான வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோரும் விருது பெறுகின்றனர். சமூக சேவகரும், ஓய்வு பெற்ற நூலகருமான பாலம் கல்யாண சுந்தரம், மருத்துவர் கோபாலசாமி வேலுசாமி, கலைத்துறை கே கல்யாணசுந்தரம் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்தோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகிறது.

ஆர் ஆர் ஆர் பட இசையமைப்பாளர் கீரவாணி, புதுச்சேரி மருத்துவர் நளினி பார்த்தசாரதி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ வழங்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுகவுக்கு 31 பேர் தான் , ஆனால் அதிமுகவுக்கு 106 பேர்!