Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோதுமை விலை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு: அமித்ஷா எடுத்த அதிரடி நடவடிக்கை!

Wheat
, வியாழன், 26 ஜனவரி 2023 (10:00 IST)
கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதை அடுத்து கோதுமையை அதிகம் பயன்படுத்தும் வட இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை குழு கூடியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கோதுமை விலையை கட்டுப்படுத்த அரசு கழகங்களில் இருந்து 30 லட்சம் கோதுமை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.
 
இதனை அடுத்து இந்திய உணவு கழகத்திலிருந்து கோதுமை இ-ஏலம் மூலம் இன்னும் ஒரு வாரத்தில் விற்பனை தொடங்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. மொத்த வியாபாரிகளுக்கு கோதுமை விற்பனை செய்யப்பட்டு ஓரிரு மாதங்களில் 30 லட்சம் டன் விற்பனை நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகம் முழுவதும் முடங்கியது மைக்ரோசாப்ட்! – அதிர்ச்சியில் பயனாளர்கள்!