இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் பாரத ரத்னா விருதிற்கு பிறகு மிக உயர்ந்த விருதுகளாக பத்ம விருதுகள் உள்ளன. பத்மபூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ ஆகிய இந்த விருதுகள் ஆண்டுதோறும் கலை, கலாச்சாரம், சினிமா, பொதுசேவை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 2023 குடியரசு தினத்தின்போது வழங்கப்பட உள்ளன. இதற்கான பரிந்துரைகளை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மக்கள் தங்களுடைய பரிந்துரைகளை https://awards.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக செப்டம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.