Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்களை ஈர்க்கக் கூடியவர் மோடி - ரஜினி,மோடிக்கு புகழாரம்

மக்களை ஈர்க்கக் கூடியவர் மோடி - ரஜினி,மோடிக்கு புகழாரம்
, செவ்வாய், 28 மே 2019 (12:47 IST)
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இந்தியாவில் தொடங்கிய மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று மே 19 ஆம் தேதி முடிவடைந்தது. பிறகு உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது. அதில் பாஜக கூட்டணி சார்பில் 354 தொகுதிகளும், பாஜக தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஸ்டாலின், ரஜினி  உள்ளிட்ட தலைவர்கள் பிதரமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி பேசினார் . அப்போது அவர் கூறியதாவது :
 
நாளை  மறுநாள் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்கவுள்ளேன். ஒருமுறை ஆதரவு அலையோ, எதிர்ப்பு அலையோ வீசிவிட்டால் அதை மாற்றுவது கடினம். யருடையா அலை வீசுகிறதோ அதில் போகிறவர் தான் ஜெயிக்க முடியுமே அல்லாமல் மற்றவர்கள் ஜெயிக்க முடியாது. 
 
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிர்ப்பு அலைகள் நிலவியபோதும் கோதாவரி - கிருஷ்ணா - காவிரி ஆகிய நதிகளை இணைப்பது தொடர்பாக நிதின் கட்காரியின் அறிவிப்பு பாராட்டத்தக்கது. நேரு , இந்திரா, கலைஞர் , எம்ஜி ஆர் ஜெயலலிதா ஆகியோர் போல் வலிமையானவர் மோடி என்று அவர் தெரிவித்தார்.

மேலும்,மக்களை ஈர்க்கக் கூடிய கட்சிக்கு வெற்றி : அப்படி மக்களை ஈர்க்கக்கூடியவர் மோடி. மக்களவை தேர்தலில் பாஜகவிற்குக் கிடைத்த வெற்றி எனபது மோடி என்ற தனிமனிதருக்குக் கிடைத்த வெற்றி. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை இருக்கிறது. அதனால்தான் தோல்வி தோல்வி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்கூல் ப்ளே பார்க்கில்... வேலையாளின் கொடூரத்தில் துடித்த சிறுமி!