Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’அந்த நடிகர் இல்லைனா கட்சியே இருக்காது’ : எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு

’அந்த நடிகர் இல்லைனா  கட்சியே இருக்காது’ : எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு
, திங்கள், 27 மே 2019 (18:36 IST)
தொடர்ந்து 10 ஆண்டுகால முயற்சி , பலகட்ட அவமானம், உச்சகட்ட விமர்சனம் , பலமுறை சிறை என தான் எதைத்தொட்டாலும் அதில் முடக்குப் போட்டு  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை ஆளுங்கட்சியான தெலுங்குதேசம் கட்சியும் , மத்தியில் அரசாண்ட காங்கிரஸ் கட்சியும் படாதபாடாக படுத்தி எடுத்துவிட்டது. .
ஆனால் தனது உத்வேகத்தால், மக்களின் மகத்தான் ஆதரவால் இம்முறை முதன்முறையாக தனது தந்தை இறப்பிற்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகாலக் கடும் போராட்டத்திற்குப் பின்னர் ஆந்திரமாநில முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
 
ஹைதராபாத் சிட்டியை மிகப்பெரும் ஐ டி துறையினருக்கு ஏற்ற தொழில் நகரமாக்கி, நாட்டின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கு கிங் மேக்கராக விளங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்து அனைவரிடம் கலந்து பேசி மக்களவைத் தேர்தலுக்கு முன்னாள் ராஜதந்திர முயற்சிகள் மேற்கொண்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு என்ற மிகப்பெரிய பிம்பத்தை, பலவருட அரசியல் சாணக்கியரை இத்தேர்தல்  எனுன் ஃபானி புயலாக மாறி அவரை ஓய்வெடுக்கவைக்க வேண்டி ஓரம் கட்டிவிட்டார் ஜெகன் மோகன்ரெட்டி.
 
ஆந்திரமாநில சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 174 தொகுதிகளில் ஒய்.எஸ் .ஆர். காங்கிரஸ் கட்சி 151 இடங்களைப் பெற்றது. தெலுங்கு தேசம் கட்சியோ வெறும் 23 இடங்களிலேயே வெற்றி பெற்றது.
 
அதேபோல் மக்களவைத் தேர்தலில் ஒய்.எஸ் .ஆர். காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 23 -யைக் கைப்பற்றியது. ஆனால் தெலுங்கு தேசம் கட்சியோ வெறும் 3 தொகுதிகளில் மாத்திரமே ஜெயித்தது.
 
இந்நிலையில் ஆந்திர மாநில சட்டபேரவைத் தொகுதியான குடிவாடாவில் ஒய்.எஸ் .ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கோடாலி நானி தற்போது பேசியுள்ளதுதான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
அவர் கூறியுள்ளதாவது :
 
’’பாஜக இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதன் அடுத்த இலக்காக இருப்பது ஆந்திரம்தான். தெலுங்கு தேசம் கட்சியானது தங்களது வெற்றியை 23 தொகுதிகளாகக் குறைந்துவிட்டது.
webdunia

இது தொடர்ந்தால் அக்கட்சி காணாமல் போகவாய்ப்புண்டு. தற்போது சினிமாவில் பிரபலமான சினிமா நடிகர் ஜீனியர் என்.டி.ஆர் அல்லது அக்குடும்பத்தில் உள்ள யாராவதும் இக்கட்சியின் அதிகாரத்தைக் கையில் எடுத்தால்தான் கட்சியானது நிலைக்கும்.

இல்லையென்றால் தெலுங்கு தேசம் கட்சியானது சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிப் போகும் என்று தெரிவித்தார்.’’

தற்போது ஆந்திர அரசியலில் கோடாலியின் பேச்சு பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நோட்டாவுக்குதான் ஓட்டு போட்டேன்... அதுக்கு என்ன? ஆனந்த் ராஜ் காட்டம்!