Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்கூல் ப்ளே பார்க்கில்... வேலையாளின் கொடூரத்தில் துடித்த சிறுமி!

Advertiesment
பள்ளி
, செவ்வாய், 28 மே 2019 (12:12 IST)
பள்ளி ப்ளே பார்க்கில் வேலையாள் ஒருவன் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாஞ்சாப்பில் உள்ள பள்ளி ஒன்றி பேரண்ட் - டிச்சர்ஸ் மீட்டிங் நடந்துள்ளது. இந்த மீட்டிங்கை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் போது 4 வயது சிறுமி வயிற்று வலியால் துடித்துள்ளார்.
 
அப்போது உணவு ஏதேனும் செரிமானம் ஆகியிருக்காது என அதை பெரிதாக சிறுமியின் தாய் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், மறுநாளும் இதே போன்று அந்த சிறுமி வலியால் துடித்ததால், பதறிப்போய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 
webdunia
அப்போது மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த தாய் சிறுமியிடம் இது குறித்து விசாரித்த போது பள்ளிப் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த போது பள்ளியில் வேலை செய்யும் நபர் ஒருவர் கொடுமையாக நடந்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். 
 
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்ட நிலையில், அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த மருந்தின் பெயர் கூடத் தெரியாது – கோமதி மாரிமுத்து பேட்டி !