Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடியோ பதிவுகள் வைரல்.. பதவியை ராஜினாமா செய்த மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங்..!

Siva
திங்கள், 10 பிப்ரவரி 2025 (06:52 IST)
மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங் அவர்களின் சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவு இணையதளத்தில் வைரல் ஆன நிலையில், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரத்திற்கு பாஜக முதலமைச்சர்  பைரோன்   சிங் தொடர்பு உள்ளது என்ற ஆடியோ பதிவுகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, மணிப்பூர் முதலமைச்சர்  பைரோன்   சிங் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் ராஜ்பவனில் உள்ள கவர்னரிடம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன.

மணிப்பூர் முதல்வரின் பதவி விலகல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவரது பதவி விலகல் குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறிய போது, பெருகி வரும் மக்கள் அழுத்தம், சுப்ரீம் கோர்ட் விசாரணை, காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆகியவற்றால் தான் மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங் ராஜினாமா செய்துள்ளார் என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து, புதிய முதல்வராக பதவி ஏற்பது யார் என்ற கேள்வி மணிப்பூர் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதுகாப்பு படையினரின் என்கவுண்டர்.. 31 நக்சல்கள் பலி.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

டெல்லியை அடுத்து மேற்கு வங்கத்திலும் பாஜக அரசு.. சுவேந்து அதிகாரி நம்பிக்கை..!

டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா.. புதிய ஆட்சி பதவியேற்பது எப்போது?

உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும்.. திமுக அரசை சரமாரியாக விமர்சனம் செய்த அண்ணாமலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments