Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகாப்பு படையினரின் என்கவுண்டர்.. 31 நக்சல்கள் பலி.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

Siva
ஞாயிறு, 9 பிப்ரவரி 2025 (16:09 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 31 நக்சல்கள் பலியானதாகவும், இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் பலியானதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தில், இந்திராவதி தேசிய பூங்காவில் இன்று காலை, நக்சல் படையினர் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, பாதுகாப்பு பணியாளர்கள் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 31 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இன்று காலை 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இருந்த நிலையில், தற்போது மேலும் 31 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை 80 நக்சல்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாகவும், இந்த ஆண்டிற்குள் நக்சல்கள் இல்லாத மாநிலமாக சத்தீஸ்கர் மாறும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments