உலகம் முழுவதும் சமீபமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் Gen Z போராட்டம் இந்தியாவில் ஏற்பட்டால் எதிர்கொள்வது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக உலக நாடுகளை ஆட்டி வைக்கும் வார்த்தையாக Gen Z போராட்டம் மாறி வருகிறது. இளைஞர்களால் அரசுக்கு எதிராக நடத்தப்படும் இந்த போராட்டம் இந்தோனேஷியா, நேபாளம், மடகாஸ்கர் என பல நாடுகளில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சமீபத்தில் நேபாளத்தில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது.
இந்நிலையில் அவ்வாறான Gen Z போராட்டம் இந்தியாவில் ஏற்படுமா? அப்படி ஏற்பட்டால் எதிர்கொள்வது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் நடந்த போராட்ட வடிவங்களை ஆய்வு செய்து விரிவான வரைவு திட்டத்தை தயாரிக்க டெல்லி காவல் ஆணையர், டெல்லி புலனாய்வுப் பிரிவு, ஆயுதக் காவல் படை, ஆபரேஷன்ஸ் பிரிவு ஆகிய 3 பிரிவுகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லியில் அப்படியொரு போராட்ட சூழல் உருவானால் எப்படி அதை முறியடிக்கலாம் என்ற வரைவு திட்டத்தை காவல்துறை தயார் செய்து வருவதாக தகவல்
Edit by Prasanth.K