Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய பணக்காரர்கள் பட்டியல்.! அம்பானிக்கு அதானி கொடுத்த ஷாக்.!!

Rich List

Senthil Velan

, வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (14:13 IST)
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முன்னணி தொழிலதிபரான அம்பானியை பின்னுக்குத் தள்ளி, தொழிலதிபர் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
 
இந்திய பணக்காரர்கள் பட்டியல் தொடர்பாக ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர் உருவாகி வருவதாகவும், கடந்த ஆண்டை காட்டிலும், கூடுதலாக 220 பேர் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
 
இந்தியாவில், ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணக்கை 1539 ஆக அதிகரித்துள்ளது.  குறிப்பாக, 1,334 பேரின் ஒட்டுமொத்த சொத்து விகிதம் உயர்ந்துள்ளதாகவும், அதில், 272 பேர் புதிய பணக்காரர்களாக உருவெடுத்திருப்பதாகவும் ஆய்வில் கூறப்படுகிறது. 

அதேசமயம், 205 பேரின் சொத்துக்கள் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும், 45 பேர் இந்தப் பட்டியலில் வெளியேறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் 354 பேர் ரூ.100 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னணி தொழிலதிபரான அம்பானியை பின்னுக்குத் தள்ளி, தொழிலதிபர் அதானி முதலிடம் பிடித்துள்ளார். 3வது இடத்தில் எச்.சி.எல்., நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் உள்ளார்.
 
பணக்காரர்கள் பட்டியல்:
 
1.கவுதம் அதானி - 11.61 லட்சம் கோடி, 2.முகேஷ் அம்பானி - 10.14 லட்சம் கோடி, 3.ஷிவ் நாடார் -3.14 லட்சம் கோடி, 4.சைரஸ் பூனாவாலா - 2.89 லட்சம் கோடி, 5.திலிப் சங்வி - 2.49 லட்சம் கோடி, 6.குமார்மங்கலம் பிர்லா - 2.35 லட்சம் கோடி, 7.கோபிசந்த் ஹிந்துஜா - 1.92 லட்சம் கோடி, 8.ராதாகிஷன் தமானி - 1.90 லட்சம் கோடி, 9.அஸீம் பிரேம்ஜி - 1.90 லட்சம் கோடி, 10.நீரஜ் பஜாஜ் - 1.62 லட்சம் கோடி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நேரத்தில் ஈரோடு, திருச்சி, நெல்லை, சேலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு