Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்திரிகையாளர்கள் மீது அமைச்சர் சுரேஷ் கோபி பரபரப்பு புகார்.!!

Advertiesment
Suresh Gobi

Senthil Velan

, வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (13:42 IST)
பத்திரிகையாளர்கள் தனக்கு தொந்தரவளித்ததாக கூறி மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, பத்திரிகையாளர்களுக்கு எதிராக திருச்சூர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
 
கேரள திரைத்துறை மீதான பாலியல் புகார் புயலை கிளப்பி உள்ளது. பல முன்னணி நடிகர்கள் மீது நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் அனைத்து திரையுலகையும் பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர், நடிகைகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக, நடிகரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ஆவேசமாக பதிலளித்த அவர், பத்திரிகையாளர்களை பிடித்து தள்ளிவிட்டு, கை விரலை உயர்த்திவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
 
இதுதொடர்பாக சுரேஷ் கோபி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அனில் அக்கரே திருச்சூர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த உதவி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 
இந்நிலையில், பத்திரிகையாளர்கள் தனக்கு தொந்தரவளித்ததாக கூறி சுரேஷ் கோபியும் திருச்சூர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பி.எட் தேர்வு வினாத்தாள் கசிவு.! விரிவான விசாரணை தேவை.! டிடிவி தினகரன் வலியுறுத்தல்.!!