Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளிப்போகிறதா எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டம்..? என்ன காரணம்..?

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (10:56 IST)
எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A மூன்றாவது கூட்டம் அடுத்த மாதம் மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த கூட்டம் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
பாஜகவை வரும் 2024 தேர்தலில் தோற்கடித்தே தீர வேண்டும் என 36 எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடந்த நிலையில் இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் நடந்தது 
 
இந்த நிலையில் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆகஸ்ட் 25 மற்றும் 26  ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த கூட்டம் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி போக இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் முக்கிய தலைவர்கள் அடுத்த மாதம் பங்கேற்க முடியாத சூழல் நிலவுவதால் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் சரியான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும்  கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா: 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!

ஈவிஎம் மெஷின்களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனா கோரிக்கை

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments