எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி சார்பில் நாளை 26 எம்பிக்கள் மணிப்பூர் பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
மணிப்பூரில் இரண்டு பெண்கள் ஒரு கூட்டத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அமளி செய்து வருவதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் I.N.D.I.A கூட்டணி எம்பிகள் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள பகுதிகளை ஆய்வு செய்வதற்காக ஜூலை 29 மற்றும் 30ஆம் தேதி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
I.N.D.I.A கூட்டணியில் உள்ள 26 கட்சிகளில் சார்பாக ஒரு கட்சிக்கு ஒரு எம்பி என 26 பேர் கொண்ட குழு மணிப்பூர் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.