Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் எத்தனை மரங்கள் வெட்டப்பட்டது ? எம். பி கேள்வி

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (17:54 IST)
இந்தியாவில் பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் இதுவரை 1 கோடி மரங்கள் வெட்டப்பட்டப்பட்டுள்ளது.
நம் நாட்டில் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாம் முறையாக பதவியேற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. அதன்பின்னர் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அதன் மீதான விவாதம்  தற்போது பாராளுமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. 
 
இந்நிலையில் இந்தியாவில் வளர்ச்சி திட்டங்களுக்காக எத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன? என்று மக்களவையில் எம் . ஒருவர் கேள்வி எழுப்பினார். 
இதற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை இணையமைச்சர் பாபூல் சுப்பிரியோ எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அந்த பதிலில், இந்தியாவில் 1.09 கோடி மரங்கள் கடந்த 2014 - 2019 ஆம் ஆண்டுவரை வளர்ச்சி திட்டங்களுக்காக  வெட்டப்பட்டுள்ளதாகவும், கடந்த 2018 - 2019 வரையான கால அளவில் 26. 9 லட்ச  மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் மேலும் 2014 - 15 ஆம் ஆண்டில் 23. 3 லட்ச மரங்களில், 2015 - 2016 ஆம் ஆண்டு 17.07 லட்ச மரங்களும் , அதேசமயம் 2017  - 2018 ஆம் ஆண்டுகளில் 25. 5 லட்ச   மரங்கள் வெட்டப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
இது ஒருபுறம் இருந்தாலும் கூட கடந்த 4 ஆண்டுகளில் 12 மாநிலங்களுக்கு, பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் மரங்கள் நட 237.07 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய மரம் நடும் திட்டத்திற்கு  328. 90  கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என  மத்திய அரசு தகவல் தகவல் தெரிவிக்கின்றன. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’தமிழகத்தின் ஏரி மனிதன்’ என பாரட்டப்பட்டவருக்கு கொலை மிரட்டல்? அரசு பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதலா? 4 பேர் படுகாயம்..!

திருநங்கைகள் பெண்கள் கிடையாது! அவர்களுக்கு சலுகையும் கிடையாது! - அங்கீகாரத்தை ரத்து செய்த நீதிமன்றம்!

பல்கலைக்கழகங்களை உங்கள் அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்.. முதல்வருக்கு தமிழிசை கோரிக்கை..

2 நாள் தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன? நிப்டி சென்செக்ஸ் விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments