Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி குறித்து ஹிண்டன்பர்க் கூறிய விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (07:24 IST)
அதானி நிறுவனங்கள் குறித்து ஹிண்டன்பர்க்  என்ற அமைப்பு கூறிய கருத்துக்களுக்கு  எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து அந்த அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் படுமோசமாக சரிந்தது.

இந்த நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மை தன்மையை ஆராய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் கடந்த சில மாதங்களாக விசாரித்தது.

மேலும் செபியின் விதிமுறைகள், பங்குச்சந்தை கட்டமைப்பை வழிபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை நாடே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments