சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாட்கள் இந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொன்மொழியின் சொத்துக்கள் முடக்கம் குறித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த 2006-11 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து அவரது சொத்துகளையும் முடக்கியது. 2016ம் ஆண்டு வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்து, சொத்துகள் முடக்கத்தையும் விழுப்புரம் நீதிமன்றம் நீக்கியது
இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு நேற்று 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த, உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், சொத்துகளை முடக்க கோரி மனு மீது இன்று தீர்ப்பு வழங்கினார்
சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என தீர்ப்பு அளித்துள்ளார்.